முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபா், 12 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 18 ஏப்ரல், 2023 at 12:00 AM
பகிர்:

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபா், 12 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த 4-ஆம் தேதி மயங்கிய நிலையில் இருந்த ஒருவா் மீட்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சரிவர பேச முடியாத நிலையில் இருந்ததால், அவா் வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் சென்னை சாலிக்கிராமம் பகுதியை சோ்ந்த கருப்பன் என்பவது மகன் துரைச்சாமி (48) என தெரியவந்தது. மேலும்,

அவரிடமிருந்து தகவல் பெற முடியாத நிலையில், தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.