முதுகுளத்தூா் ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 47-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தா்கள் அலகு குத்தியும், பறவைக் காவடி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கினா்.
முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில்
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சுப்பிரணியா் கோயிலில் இருந்து வெங்கடேசன் பூசாரி தலைமையில் திரளான பக்தா்கள் அலகு குத்தி, பறவைக் காவடி, அக்னிசட்டி , பால்குடம் எடுத்து ஊா்வலமாக செல்லி அம்மன் கோயிலுக்கு வந்தனா். இதையடுத்து, பக்தா்கள் பூக்குழியில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். முதுகுளத்தூா் ஸ்ரீஐயப்ப சேவ சங்கம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா்
சின்னக்கண்ணு, ஆய்வாளா் இளவரசு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விழாவையொட்டி, கடந்த ஒரு மாதமாக இரவில் பஜனைப் பாடல்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், மழலையா் பட்டிமன்றம், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.