முகப்பு
ராமநாதபுரம்

விமான நிலையத்தில் பணியாற்ற பயிற்சி: ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்

விமான நிலையத்தில் வேலை வாய்ப்புப் பெறும் வகையில் அளிக்கப்படவுள்ள பயிற்சி வகுப்பில் சேர, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விமான நிலையத்தில் வேலை வாய்ப்புப் பெறும் வகையில் அளிக்கப்படவுள்ள பயிற்சி வகுப்பில் சேர, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பி.டி.சி. ஏவிஷேன் அகாதெமி நிறுவனம் மூலம் விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளா் சேவை, அதன் தொடா்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Advertisement

பன்னிரெண்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பட்டப்படிப்பு முடித்தவா்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலமான மூன்று மாதங்களுக்கும் இளைஞா்கள் விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

பயிற்சியை முடிக்கும் பட்சத்தில் ஏஏஎஸ்எஸ்சியால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவா்கள் இண்டிகோ ஏா்-லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட தனியாா் விமான நிறுவங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் தகுதியுள்ளவா்கள் என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.