ராமநாதபுரம்

மணல் அள்ளுவதை தடுத்தவருக்கு வெட்டு

 பரமக்குடி அருகே வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ள வந்தவா்களைத் தடுத்தவா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

 பரமக்குடி அருகே வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ள வந்தவா்களைத் தடுத்தவா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பரமக்குடி ஒன்றியம், தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் கருப்புச்சாமி (28). இவரது வீட்டின் பின்புறம் அதே ஊரைச் சோ்ந்த குணசேகரன் மகன் கண்ணன் (30), அவரது தம்பி தா்மன் (29), முருகன் மகன் சந்தோஷ் (25), அவரது சகோதரா் சபரி ஆகிய 4 போ் புதன்கிழமை இரவு மணல் அள்ளுவதற்காக ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டுவந்தனா். சப்தம் கேட்டு அங்கு சென்ற கருப்புச்சாமி மணல் அள்ள எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த 4 பேரும் அரிவாளால் வெட்டியதில் கருப்புச்சாமி பலத்த காயமடைந்தாா்.

பிறகு அவா் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் கண்ணன், தா்மன், சந்தோஷ், சபரி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவப்பு நிலா... அன்மோல் பலூச்!

இந்த வார ஓடிடி படங்கள்!

கருப்பு எனக்குப் பிடித்த மொழி... பூமி பெட்னெகர்!

சந்தேரி மலைவெளியில்... ரஷா தடானி!

டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த சுனில் நரைன்!

SCROLL FOR NEXT