ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேசுவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை தமிழ்நாடு வனம், வன உயிரின கடத்தல் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

ராமேசுவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை தமிழ்நாடு வனம், வன உயிரின கடத்தல் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருப்பதாக வனம், வன உயிரின கடத்தல் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, வனத் துறையினா் ராமேசுவரம்-தனுஷ்கோடி சாலையில் தெற்கு கரையூா் கிராமத்தின் அருகே கருவேலங்காட்டில் புதன்கிழமை சோதனையிட்டனா். அங்கு சுமாா் 200 கிலோ கடல் அட்டைகள் உலா்த்திவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்து, கடல் அட்டைகளைப் பதப்படுத்தியவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT