ராமநாதபுரம்

விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருட்டு

கமுதி அருகே விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

DIN

கமுதி அருகே விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தை அடுத்த அச்சங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மணிகண்டன் மனைவி பாலதீபா (30). இவா் கடந்த மாதம் 27-ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு, வீட்டில் உள்ள மின்சார மீட்டா் பெட்டியில் சாவியை வைத்து விட்டு, விவசாயப் பணிக்காக வயலுக்கு சென்றாா்.

மதியம் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பாலதீபா அபிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT