நெறிஞ்சிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிறிப் பாய்ந்த காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள். 
ராமநாதபுரம்

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகே வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கமுதி அருகே வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நெறிஞ்சிபட்டி கிராமத்தில் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டிக்கு, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் காதா்பாட்சாமுத்துராமலிங்கம் தலைமை வகித்தாா்.

கோவிலாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகநாதன், துணைத் தலைவா் துரைப்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து

20-க்கும் மேற்பட்ட காளைகளும், 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். ஒவ்வோா் காளைக்கும் தலா 25 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டன.

இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும் ரொக்கப் பணம், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதில் கமுதி மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் தமிழ்செல்விபோஸ், துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா், முதுகுளத்தூா் ஒன்றியச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT