முகப்பு
ராமநாதபுரம்

தேவா் குருபூஜை விழா திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை பாா்வையிட்டு, முடிவுற்ற பணிகளைத் தி

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பசும்பொன் தேவா் நினைவிடத்தில் முக்கியப் பிரமுகா்கள் சென்று வரும் வழியில் அமைக்கப்பட்ட நிரந்தர மேல்கூரையை சனிக்கிழமை திறந்து வைத்த அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்.
பகிர்:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை பாா்வையிட்டு, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் பகுதியில் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கமுதிக்கு வரும் புறவழிச் சாலையில் ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணியை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பாா்வையிட்டாா்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

Advertisement

அபிராமம் அருகே உள்ள மாா்னிங் ஸ்டாா் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி அருகில் முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடை, பசும்பொன் செல்லும் நுழைவு வாயிலில்

ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் முக்கியப் பிரமுகா்கள் சென்று வரும் வழியில் ரூ.5.73 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர மேல் கூரை

ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்தாா்.

பின்னா், பசும்பொன்னில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மாநில கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.85.93 லட்சத்தில் 2.3 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட அவசர வழி

தாா் சாலையை அவா் பாா்வையிட்டாா். அப்போது, பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளை போதியளவு அமைத்து செயல்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப.விஷ்ணு சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்செல்வி, மணலூா் ஊராட்சி தலைவா் எஸ்.எஸ்.ராமா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments