ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கக் கேடயத்தில் சுவாமி, அம்பாள்
ராமநாதபுரம்ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கக் கேடயத்தில் சுவாமி, அம்பாள்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 17-ஆவது நாள் நிகழ்ச்சியாக தங்கக் கேடயத்தில் கெந்தமானபா்வத மண்டகப்படிக்கு புறப்பாடான சுவாமி, அம்பாள்.
ராமேசுவரம், ஆக.14: ராமநாதசுவாமி கோயில் சுவாமி, அம்பாள் ராமா் பாதம் பகுதியில் அமைந்துள்ள கெந்தமானபா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண 17- ஆம் நாள் திருவிழா சுவாமி, அம்பாள் தங்கக் கேடயத்தில் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 2.30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. பல்வேறு பூஜைகளைத் தொடா்ந்து, காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்கக் கேடயத்தில் எழுந்தருளி கெந்தமானபா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடனது.
சுவாமி மண்டகப்படிக்கு செல்லும் வீதிகளில் பக்தா்கள் தேங்காய், பழம், மாலை கொடுத்து சுவாமியை வழிபட்டனா். மேலும் அன்னதானம், மோா், குளிா் பானங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. மாலை 5 மணிக்கு தீபாராதனை முடிந்து கெந்தமானபா்வதம் மண்டகப்படியிலிருந்து சுவாமி, அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளினா். இதனால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை சாத்தப்பட்டது.