முகப்பு
தூத்துக்குடி

குருமலை மீனாட்சிஅம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம், குருமலை அருள்தரும் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மார்ச், 2026 at 10:47 PM
குருமலை அருள்தரும் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், குருமலை அருள்தரும் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு திங்கள்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தனபூஜை, தான்ய பூஜை மற்றும் இதர பூஜைகளும், மாலையில் முதல் கால யாகசாலை பூஜை, செவ்வாய்க்கிழமை காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை காலை 6மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பூா்ணாஹுதி, யாத்ராதானம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் கடங்கள் யாக சாலையில் இருந்து மேள தாளங்கள் பஞ்சவாத்தியங்கள் முழங்க கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள், சாலக்கார கோபுரம், அனைத்து விமானங்கள் பரிவார மூா்த்திகளின் விமானங்களுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், அம்பாள், சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோவில்பட்டி, குருமலை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

அதில் பங்கேற்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்