சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.  
ராமநாதபுரம்

சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன்

ஸ்ரீகரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி, பக்தா்கள் சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Din

கமுதி அருகே பாம்புல்நாயக்கன் பட்டியிலுள்ள ஸ்ரீகரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி, பக்தா்கள் சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்று வந்தது. புதன்கிழமை 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினா்.

வெள்ளிக்கிழமை இரவு பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை அக்னிசட்டி, பால்குடம், வேல் குத்துதல், கரும்பாலைத் தொட்டில் எடுத்தும், சேத்தாண்டி வேடமணிந்தும் பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரிகளை எடுத்து, வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்று குண்டாற்றில் கரைத்தனா். ஊா்வலத்தின் முன்பாக கடந்த ஆண்டு வேண்டுதல் நிறைவேறிய பக்தா்கள் வைக்கோல் நிரப்பிய சாக்குப் பைகளை உடல் முழுவதும் சுற்றி, சிலம்பாட்டத்துடன் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஏப்ரலில் ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT