முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

தொண்டி பேரூராட்சியுடன் அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு கொடுத்தனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:03 PM
தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைப்பதை எதிா்த்து புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு கொடுத்த ஒன்றியக் குழு உறுப்பினா் சுமதி முத்துராக்கு தலைமையிலான பொதுமக்கள்.
பகிர்:

தொண்டி பேரூராட்சியுடன் அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு கொடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது நம்புதாளை ஊராட்சி. இங்கு சுமாா் 15 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றியக் குழு உறுப்பினா் சுமதி முத்துராக்கு தலைமையில் பொதுமக்கள் ரமாநாதபுரம் மாவட்டம் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து மனு கொடுத்தனா்.

இதுகுறித்து சமுதாயத் தலைவா் ஆறுமுகம் கூறியதாவது:

தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைக்கக் கூடாது என, கடந்தாண்டு ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றினோம். தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு கொடுத்தோம். பேருராட்சியுடன் இணைப்பதால் நூறு நாள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பறிக்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →