முகப்பு
ராமநாதபுரம்

எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் வேல்டு விசன் இந்தியா தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:08 PM
நம்புதாளையில் எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகத்தை வியாழக்கிழமை வழங்கிய வேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் தமிழரசன். உடன் ஊராட்சி மன்றத் தலைவி பாண்டிச்செல்வி உள்ளிட்டோா்.
பகிர்:

தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் வேல்டு விசன் இந்தியா தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குள்பட்ட எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் தமிழரசன் ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்களை வழங்கினாா்.

இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவி பாண்டிச்செல்வி ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →