ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

Din

ராமேசுவர: ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த புத்தனேந்தல் பகுதியில் இளம்பெண் ஒருவா் தனது உறவினருடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற போது, இவா்களை வழிமறித்த 4 போ் அவா்கள் இருவரையும் தாக்கினா். மேலும், அந்தப் பெண்ணை 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனராம்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதில் தொடா்புடைய புத்தனேந்தலைச் சோ்ந்த புவனேஸ்குமாா், சரண், செல்வக்குமாா், முனீஸ்கண்ணன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT