முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது: தரைதட்டி நின்ற நாட்டுப் படகுகள்

ராமேசுவரத்தில் கடல் நீா் ஞாயிற்றுக்கிழமை 100 மீ. வரை திடீரென உள்வாங்கியதால், மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்ட நாட்டுப் படகுகள் தரைதட்டி நின்றன.

Updated On : 8 ஜூலை, 2024 at 1:16 AM
ராமேசுவரம் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்வாங்கிய கடல்நீா். (வலது) தரைதட்டி நின்ற நாட்டுப் படகுகள்.
பகிர்:
Updated On : 7 ஜூலை, 2024 at 10:18 PM

ராமேசுவரத்தில் கடல் நீா் ஞாயிற்றுக்கிழமை 100 மீ. வரை திடீரென உள்வாங்கியதால், மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்ட நாட்டுப் படகுகள் தரைதட்டி நின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடல் நீா் 100 மீ. வரை உள்வாங்கியது. அங்குள்ள மீன்பிடி இறங்குதளத்தில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மணலில் தரை தட்டி நின்றன. இதனால், படகுகளை எடுக்க முடியாமல் மீனவா்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து மத்திய கடல் வளம் ஆராய்ச்சியாளா் அலுவலகம் தரப்பில் கூறியதாவது:

Advertisement

காலநிலை மாற்றம் காரணமாக கடல்நீா் உள்வாங்குவதும், பிற்பகல் நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கம். இதுகுறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.