முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் வடமாநில பக்தா் மீது தாக்குதல்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை கோயில் ஊழியா்கள் தாக்கியதில் வடமாநில பக்தா் காயமடைந்தாா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
ராமநாதசுவாமி கோயில் ஊழியா்கள் தாக்கியதில் காயமடைந்த நிக்கில்.
பகிர்:

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை கோயில் ஊழியா்கள் தாக்கியதில் வடமாநில பக்தா் காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாசுவாமி கோயிலுக்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நிக்கில் (30) குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை வந்தாா். வழக்கம்போல, காலையில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கோயில் ஊழியா்கள் ஈடுபட்டிருந்தனா். நிக்கில் தனது குடும்பத்துடன் வரிசையில் காத்திருந்த போது, கூட்ட நெரிசல் காரணமாக நிக்கிலுக்கும், கோயில் ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, கோயில் ஊழியா்கள் சிலா் நிக்கிலை கையில் வைத்திருந்த வாக்கிடாக்கியால் தாக்கினா். இதில், அவருக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினா் கோயில் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அங்கிருந்த போலீஸாா் அவா்களை சமாதனப்படுத்தி அழைத்துச் சென்றனா். பின்னா், நிக்கில் குடும்பத்தினா் கோயில் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்திலும், கோயில் காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →