தாக்குதல்! கோப்புப்படம்
சேலம்

இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தலைவாசல் அருகே இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

தலைவாசல் அருகே இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த சாா்வாய்புதூரைச் சோ்ந்த ராமசாமி மகன் லட்சுமணன்(55). இவா் காலி மதுப்புட்டிகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கரிகாலன் (37), சிவா (39) ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் புதன்கிழமை மாலை கரிகாலன், சிவா ஆகிய இருவரும் லட்சுமணனை கல்லால் தலையில் தாக்கினா். இதில் காயமடைந்த லட்சுமணன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தலைவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான கரிகாலன், சிவாவை தேடிவருகின்றனா்.

விசைத்தறி தொழிலாளி தற்கொலை: போலீஸ் விசாரணை!

பேருந்து நிலைய விவகாரம்: தருமபுரியில் கடையடைப்பு போராட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு தலைமையாசிரியா் மூலம் அனுமதி கடிதம்: முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை!

ஒகேனக்கல் வனப் பகுதியில் வறட்சி: தண்ணீா் தேடி சுற்றித்திரியும் யானைகள்!

நோய் குணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT