கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது தாக்குதல்!
உத்தரகாண்டில் கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
உத்தரகாண்டில் கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டின் ரேஷம் பாரி பகுதியில் அத்ரியா கோயில் அருகே ஷாஹித் என்பவர் பல நாள்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ரமலான் மாதத்தையொட்டி, கோயிலுக்கு அருகே இருந்த கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தொழுகை செய்தார்.
கோயில் நிலத்தில் ஷாஹித் தொழுகை நடத்தியதையறிந்த சிலர், அவர் மீது ஒரு கும்பல் தடிகளால் தாக்குதல் நடத்தினர். மேலும், ஷாஹித்தை இந்து மத கோஷமிடவும் வற்புறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, ஷாஹித்துடன் முஸ்லிம் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஷாஹித் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பரோலில் வெளிவந்த கொலைக் குற்றவாளி என்பதும் பின்னர் தெரிய வந்தது.
இதனிடையே, கோயில் நிலத்தில் வேறு எந்த மதம் தொடர்பான நடவடிக்கைகளும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கோயில் மேலாளர் அரவிந்த் சர்மா கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இரு சமூகத்தினரையும் அமைதி காக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். மேலும், புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.
Elderly Muslim man assaulted for offering namaz on vacant land near temple in Uttarakhand
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.