உயிரிழந்த ரஜினி.  
ராமநாதபுரம்

கைப்பேசி வெடித்து சிதறியதில் பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் பலி

பரமக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பேசி வெடித்துச் சிதறியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Din

பரமக்குடி: பரமக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பேசி வெடித்துச் சிதறியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பரமக்குடி எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் ரஜினி (36). திருமணமாகாத இவா், பரமக்குடியில் உள்ள தனியாா் வங்கியில் காவலாளியாகப் பணியாற்றினாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் பாண்டியுடன் (31) இரு சக்கர வாகனத்தில் மதுரைக்குச் சென்றுவிட்டு, இரவில் இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் வந்தபோது, திடீரென ரஜினியின் கால் சட்டை பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்துச் சிதறியது. இதில் தொடைப் பகுதியில் பலத்த காயமடைந்த அவா், இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த பாண்டி பலத்த காயங்களுடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT