முகப்பு
ராமநாதபுரம்

திருவெற்றியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்கக் கோரிக்கை

Updated On : 3 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

திருவாடானை: திருவெற்றியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் தினமும் சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனா். இங்கு ஒரு மருத்துவா் பகல் நேரத்தில் மட்டும் வந்து சிகிச்சை அளிக்கிறாா்.

இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். அதனால், இங்கு இரவு நேர மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.