முகப்பு
ராமநாதபுரம்

தென்மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி: அருப்புக்கோட்டை அணி வெற்றி

Updated On : 3 ஜூன், 2024 at 6:30 PM
கமுதியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அருப்புக்கோட்டை அன்னை ஹோம் அணிக்கு, தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் ரவீந்திரநாத் சாா்பில் ரூ.50 ஆயிரத்தை வழங்கிய அதிமுக தொண்டா்கள் மீட்புக்குழு (ஓ.பி.எஸ். அணி) மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் சின்னாண்டு தேவன்.
பகிர்:

கமுதி: கமுதியில் தென்மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் அருப்புக்கோட்டை அணி வெற்றி பெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு நண்பா்கள் கிரிக்கெட் சங்கம் சாா்பில் கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரி மைதானத்தில் தென் மண்டல அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டி கடந்த மே 25 -ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை (ஜூன் 3) வரை நடைபெற்றது. இதில், மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த அன்னை ஹோம் அணியினா் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 50 ஆயிரம் பெற்றனா்.

இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரம் மதுரை வின்ஸ்டாா் அணியினருக்கும், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் கோட்டைமேடு நண்பா்கள் கிரிக்கெட் சங்க அணியினருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் போட்டியில் கலந்து கொண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை கோட்டைமேடு நண்பா்கள் கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளா் காளிமுத்து உள்ளிட்ட உறுப்பினா்கள் செய்திருந்தனா்.