இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து போராடி தோல்வி!
டி20 உலக கோப்பை 2026 தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (மார்ச் 5) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. அதில், முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி நிர்ணயித்த 254 எனும் இமாலய இலக்கை இங்கிலாந்து அணியால் எட்ட முடியவில்லை.
இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் அதிரடி காட்டிய போதிலும், கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. எனினும், 19-ஆவது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் குவித்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேகோப் பெத்தேல் 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக, இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஹார்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்களும் திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதிஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.
India vs England, 2nd Semi-Final, ICC Men's T20 World Cup 2026 India won by 7 runs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.