பென் டக்கெட் சதம் விளாசல்: இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 19) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
பென் டக்கெட் சதம் விளாசல்; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஜேக்கப் பெத்தேல் 93 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட்டும் அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். அதில் 18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கிய கேப்டன் ஹாரி ப்ரூக் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தனர்.
ஒரு முனையில் அரைசதம் கடந்து ஜோ ரூட் விளையாட, மறுமுனையில் அதிரடியில் மிரட்டினார் ஜோஸ் பட்லர். அதிரடியாக விளையாடிய அவர் 13 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஜோ ரூட் 48 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.
இந்தியா தரப்பில் பிரஷித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.
Batting first in the third ODI against India, the England team scored 387 runs for the loss of 3 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.