முத்தரப்பு டி20 தொடர்: பிரிடோரியஸ் அதிரடி; ஜிம்பாப்வேவுக்கு 186 ரன்கள் இலக்கு!
முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.
முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.
நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
பிரிடோரியஸ் அதிரடி; ஜிம்பாப்வேவுக்கு 186 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் லுஹான் டி பிரிடோரியஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து 6 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, டெவால்ட் பிரேவிஸ் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஜோர்டான் ஹெர்மேன் 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஜிம்பாப்வே தரப்பில் வெஸ்லி மத்வீர் 3 விக்கெட்டுகளையும், பிராட் ஈவன்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நியூமேன் நியாம்ஹுரி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
Batting first in the match against Zimbabwe in the tri-nation T20 series, the South African team scored 185 runs for the loss of 7 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.