FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு 2-வது வெற்றி!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 செப்டம்பர் 2026, 9:37 pm IST
- படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

பிரிடோரியஸ் அதிரடி; ஜிம்பாப்வேவுக்கு 186 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் லுஹான் டி பிரிடோரியஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து 6 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, டெவால்ட் பிரேவிஸ் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஜோர்டான் ஹெர்மேன் 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஜிம்பாப்வே தரப்பில் வெஸ்லி மத்வீர் 3 விக்கெட்டுகளையும், பிராட் ஈவன்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நியூமேன் நியாம்ஹுரி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்காவுக்கு 2-வது வெற்றி!

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 17.4 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராஸா 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நியூமேன் நியாம்ஹுரி 27 ரன்கள், இன்னொசண்ட் கையா 18 ரன்கள், பிரையன் பென்னட் 13 ரன்கள் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் கேப்டன் ஜோர்ன் ஃபோர்ட்டூயின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டுயன் ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும், பிரேநேலன் சுப்ராயன் மற்றும் பீட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அதிரடியாக விளையாடி 94 ரன்கள் எடுத்த லுஹான் டி பிரிடோரியஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

summary

South Africa won the match against Zimbabwe by 43 runs in the tri-nation T20 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments