FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முத்தரப்பு ஒருநாள் தொடர்: வங்கதேசத்துக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.

17 அக்டோபர் 2026, 9:36 pm IST
- படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் அபு தாபியில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

பிரண்டன் டெய்லர், கிரைக் எர்வின் அசத்தல்!

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் டாப் ஆர்டர் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. பிரையன் பென்னட் 0 ரன், பென் கரண் 6 ரன்கள் மற்றும் டஃபாட்ஸ்வா 16 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தனர். அதன் பின், பிரண்டன் டெய்லர் மற்றும் கிரைக் எர்வின் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.

பிரண்டன் டெய்லர் 101 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். கிரைக் எர்வின் 106 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். நியூமேன் நியாம்ஹுரி மற்றும் வெலிங்டன் மசகட்ஸா தலா 21* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். வெஸ்லி மத்விர் 17 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் சைஃப் ஹாசன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ரிஷாத் ஹொசைன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

summary

In the match against Bangladesh in the triangular ODI series, Zimbabwe batted first and scored 271 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments