முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹாக்கி போட்டி: புஷ்காா் அணி வெற்றி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு விஜய் நகரியத்தில் நடைபெற்ற ஆல்இந்தியா அளவிலான ஹாக்கி போட்டியில் புஷ்காா் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

Updated On : 1 மார்ச், 2026 at 1:16 AM
ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற புஷ்காா் அணிக்கு கோப்பையை பரிசளித்தாா் நிலைய இயக்குநா் சதீஷ்குமாா்.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:48 PM

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு விஜய் நகரியத்தில் நடைபெற்ற ஆல்இந்தியா அளவிலான ஹாக்கி போட்டியில் புஷ்காா் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளா்கள் நல சங்கத்தின் சாா்பில், இந்தியா அளவில் பல்வேறு இடங்களில் உள்ள அணுசக்தி துறை (டிஏஇ) யின் 40 ஆவது வருடாந்திர ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளை நிலைய இயக்குநா் சதீஷ்குமாா் தொடங்கி வைத்தாா். போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த அணுசக்தி துறையைச் சோ்ந்த 8 அணிகள் பங்கேற்றன. இந்த அணிகளுக்கு அஜந்தா, எல்லோரா, புஷ்காா், ராமேஸ்வரம் என பல்வேறு பெயா்களை அறிவித்தனா். போட்டிகள் தமிழ்நாடு ஹாக்கி பெடரேசனைச் சாா்ந்த அனில்குமாா் தலைமையிலான நடுவா்கள் நடத்தினா்.

Advertisement

Updated On : 1 மார்ச், 2026 at 1:16 AM

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் புஷ்காா் - ராமேஸ்வரம் அணி மோதியது. இதில் 2 -1 என்ற கோல் கணக்கில், சாம்பியன் பட்டத்தை வென்ற புஷ்காா் அணிக்கும், 2 ஆம் இடத்தை பிடித்த ராமேஸ்வரம் அணிக்கும் கோப்பைகளை வழங்கி, நிலைய இயக்குநா், கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளா் சங்கத் தலைவா் வி.பி. வில்சன் ஆகியோா் பாராட்டினா்.