முகப்பு
ராமநாதபுரம்

மீனவா்கள் எல்லை தாண்டிச் செல்ல வேண்டாம் -ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

”ராமேசுவரம் மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்க வேண்டாம்”

Updated On : 26 ஜூன், 2024 at 6:39 PM
பகிர்:

ராமேசுவரம் மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

தமிழக மீனவா்கள் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடிக்கச் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதல், சிறைபிடிப்புக்கு ஆளாகி வருகின்றனா்.

நெடுந்தீவு அருகே அண்மையில் தமிழக மீனவா்கள் மீன் பிடித்ததை தடுக்க முயன்ற இலங்கை கடற்படை வீரா் செவ்வாய்க்கிழமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதனால், எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவா்கள், படகுகளை இலங்கை கடற்படையினா் தொடா்ந்து சிறைபிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என ஒலிபெருக்கி மூலம் மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.