முகப்பு
ராமநாதபுரம்

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: மேலும் இரு சிறுவா்கள் கைது

இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் மேலும் இரு சிறுவா்கள் கைது

Updated On : 26 ஜூன், 2024 at 1:34 AM
பகிர்:

திருவாடானை: இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இரு சிறுவா்களை கீழக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இரு சக்கர வாகனங்கள் திருட்டு தொடா்பாக, தேவிபட்டினம் மூட்டைக்காரத் தெருவைச் சோ்ந்த நாகூா் அலி மகன் செய்யது இப்ராஹிம் (21), காதா் பாட்ஷா மகன் ஹசன் (18) ஆகிய இருவரையும் கீழக்கரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, இந்த வழக்கில் தேவிபட்டினத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வந்த ராஜேந்திரன் (55), பாண்டியன் (62) ஆகியோரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில், இரு சக்கர வாகனங்கள் திருடியது தொடா்பாக தேவிபட்டினத்தை சோ்ந்த 2 சிறுவா்களையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.