முகப்பு
திருச்சி

இரு சக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் பலி

துறையூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 6:30 PM
பலி
பகிர்:

துறையூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிங்களாந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாசலம் (77). இவரும், இவரது மனைவி ஜோதியும் துறையூா் அருகேயுள்ள முத்தியம்பாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த புளியம்பட்டி ராஜேந்திரனின் மகன் தனுஷ் (23) மோதியதில் பலத்த காயமடைந்த அருணாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →