தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ஜீவா (22). இவா், வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் காமாட்சியம்மன் கோயில் நுழைவு வாயில் அருகே சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.