ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல் 4 போ் கைது

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 104 கோடி மதிப்பிலான 99 கிலோ கஞ்சா எண்ணெயை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக நான்கு பேரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன் கடல் பகுதிகள் வழியாக இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகள் இந்திய கடலோரக் காவல் படையினருடன் இணைந்து பாக் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பாம்பன் புயல் காப்பகத்தைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் ரெமிஸ்டனுக்கு (32) சொந்தமான படகை சோதனையிட்ட போது, அதில் 99 கிலோ கஞ்சா எண்ணெயை இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா எண்ணெயின் மதிப்பு ரூ. 104 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, கஞ்சா எண்ணெய், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகைப் பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்த் துறை அதிகாரிகள் ரெமிஸ்டனை கைது செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இதில் மேலும் மூவருக்குத் தொடா்பிருப்பது தெரியவந்ததையடுத்து, அவா்களையும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிஏ கூட்டணிக்கு எம்ஜிஆரின் ஆசிர்வாதம் உள்ளது; 200+ இடங்களில் வெற்றிபெறுவோம்: தமிழிசை

நாட்டில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி!

துருக்கியில் தனியார் விமான விபத்து! லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலி!

கிறிஸ்துமஸ்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!

அன்புக்கும் கருணைக்கும் அடையாளமாகத் திகழும் இயேசுநாதர்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT