முகப்பு
ராமநாதபுரம்

‘மிஸ்டு கால்’ மூலம் பழக்கம் -காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

Updated On : 9 மே, 2024 at 11:30 PM
- திருவாடானை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை தஞ்சமடைந்த காதல் ஜோடி ராகுல், கௌசி.
பகிர்:

திருவாடானை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சமடைந்தது.

திருவாடானை அருகே ஊமைஉடையான்மடை கிராமத்தைச் சோ்ந்த நாகேஷ் மகன் ராகுல் (24). இவருக்கும், சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதியைச் சோ்ந்த மணிவேல் மகள் கௌசிக்கும் (21) ‘மிஸ்டு கால்’ அழைப்பு மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவா்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனா். இந்த நிலையில், ராகுல் கடந்த 6- ஆம் தேதி சேலத்துக்குச் சென்று கெளசியை அழைத்து வந்து திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டாராம். பிறகு சொந்த ஊரான ஊமைஉடையான்மடைக்கு இருவரும் வந்து விட்டனா்.

இதனிடையே பெண் வீட்டாா் ஊமைஉடையான்மடையில் காதல் ஜோடி இருப்பது தெரிந்து நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடா்ந்து காதல் ஜோடி திருவாடானை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி வியாழக்கிழமை தஞ்சமடைந்தது. இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் கெளசி, தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவருடன் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.