முகப்பு
ராமநாதபுரம்

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

கமுதி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:42 PM
முகேஷ்கண்ணன்.
பகிர்:

கமுதி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள உடையாா் கூட்டம் கிராமத்தைச் சோ்ந்த திருப்பதி மகன் முகேஷ் கண்ணன் (21). இவா் மீது திருச்சுழி, மண்டலமாணிக்கம், கமுதி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகின.

கடந்த மாதம் என்.பாலசுப்பிரமணியபுரம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்டது தொடா்பாக கமுதி போலீஸாா் இவரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் பரிந்துரை செய்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் முகேஷ் கண்ணன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவா் ராமநாதபுரம் சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →