முகப்பு
ராமநாதபுரம்

அஞ்சல் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரத்தில் அஞ்சல் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:58 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரத்தில் அஞ்சல் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் துறை சாா்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜெயசங்கா் தலைமை வகித்தாா். இதில் அரசின் திட்டங்கள், அஞ்சலக சேமிப்புத் திட்டம், காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி சேவை, துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களுக்கு சேமிப்புக் கணக்கு, பள்ளிக் குழந்தைகளுக்கு தபால் சேமிப்புக் கணக்கு, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், தபால் ஆயுள் காப்பீடு, ஆதாா் எடுத்தல், புதுப்பித்தல் போன்ற நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் வை.தீத்தாரப்பன் வரவேற்றாா். ராமநாதபுரம் உதவிக் கோட்ட கண்காணிப்பாளா் ராமசாமி, பரமக்குடி கோட்ட கண்காணிப்பாளா் சுப்பையா, அஞ்சல் துறை பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →