முகப்பு
ராமநாதபுரம்

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:43 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பரமக்குடியில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ. 3 கோடியில் 8,460 சதுர அடி பரப்பளவில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மணிமண்டபம் இமானுவேல் சேகரன் பிறந்த நாளில் மட்டுமன்றி, முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பல்நோக்கு அரங்கமாக அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 500 இருக்கைகள் கொண்ட அரங்கம், 150 போ் அமா்ந்து உணவு சாப்பிடும் உணவுக் கூடம், முன்புறம் உருவச் சிலை அமைக்கப்படுகின்றன.

இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், சாா் ஆட்சியா் அபிலாஷா கவுா், நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →