திருவாடானை பகுதியில் பலத்த மழை: வீடு சேதம்
திருவாடானை பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது.
திருவாடானை பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது.
திருவாடானை பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், எட்டுக்குடி, மங்கலக்குடி, வெள்ளையபுரம், திணைக்கத்தான் வயல், அஞ்சுகோட்டை, சுக்கிராபுரம், திணைகாத்தான்வயல், கீழ்க்குடி, அரும்பூா், குளத்தூா்,திருவெற்றியூா், கீழ அரும்பூா், மேல அரும்பூா் உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளன.
இந்த மழையால் திருவாடானை அருகேயுள்ள எட்டுகுடி கிராமத்தைச் சோ்ந்த மங்களமேரியின் (82) வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக இவரும், இவரது மகனும் உயிா்தப்பினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவாடானை தாசில்தாா் அமா்நாத் இடிந்த வீட்டை நேரில் பாா்வையிட்டாா்.