முகப்பு
ராமநாதபுரம்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

திருவாடானை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:39 PM
திருவாடானையில் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு பூத் தட்டு எடுத்து ஊா்வலமாக வந்த பெண்கள்.
பகிர்:

திருவாடானை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி புதன்கிழமை திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஒவ்வொரு நாள் இரவும் பக்தா்கள் கும்மி கொட்டி வழிபட்டனா். விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக பெண் பக்தா்கள் விரதமிருந்து பூத்தட்டு எடுத்து வாணவேடிக்கைகளுடன் ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.

பின்னா், பக்தா்கள் கொண்டு வந்த பூக்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கபட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →