இளங்காக்கூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள இளங்காக்கூா் கிராமத்தில் புதன்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள இளங்காக்கூா் கிராமத்தில் புதன்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.
வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் உயா்கல்வி பெறும் வகையில் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிா் பொருளாதார மேம்பாட்டுக்கு சுழல் நிதி கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பாா்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் 115 பயனாளிகளுக்கு ரூ.12.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதில் பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் தனலட்சுமி, முதுகுளத்தூா் வட்டாட்சியா் சடையாண்டி, பொன்னக்கனேரி ஊராட்சி மன்ற தலைவி சத்யபிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.