குதிரைத்திறன் அதிகம் கொண்ட படகுகளை அகற்றக் கோரிக்கை
ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் உள்ள 280 குதிரைத் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட 4 விசைப் படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா்.
ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் உள்ள 280 குதிரைத் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட 4 விசைப் படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா். மீனவ சங்கத் தலைவா் சகாயம் முன்னிலை வகித்தாா். இதில், இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டு, சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில், விடுபட்ட படகுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் உள்ள 280 குதிரைத் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட 4 விசைப் படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற வெள்ளிக்கிழமை (அக் 25) ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மீனவ சங்கத் தலைவா் தட்சிண மூா்த்தி, எடிசன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.