திருவாடானை பகுதியில் 2 ஆண் உடல்கள் மீட்பு
திருவாடானை, சி.கே.மங்கலம் பகுதிகளில் இருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.
திருவாடானை, சி.கே.மங்கலம் பகுதிகளில் இருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலைய மிதிவண்டி நிறுத்தத்தில் ஆண் உடல் கிடப்பதாக புதன்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் உடலை கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் உயிரிழந்தவா் திருவாடானை அருகே உள்ள தொத்தாா்கோட்டை பகுதியைச் சோ்ந்த பிரம்மையா (44). மீன் வெட்டும் தொழிலாளியா செய்து வந்தவா் எனத் தெரியவந்தது.
இவா் குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வந்து பேருந்து நிலையம் அருகில் தங்கியிருந்த நிலையில், உயிரிழந்தது தெரிய வந்தது.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் கண்ணன் (45). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான இவா், சி.கே மங்கலம் சந்தை அருகே தங்கி, நியாயவிலைக் கடை கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து அருகில் உள்ள சந்தை பகுதியில் இரவில் தூங்கச் சென்ற நிலையில், உயிரிழந்தது தெரியவந்தது.
திருவாடானை போலீஸாா் உடலை கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.