முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க புதிய நிா்வாகிகள் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:19 PM
திருவாடானை நீதிமன்ற வாளகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க புதிய நிா்வாகிகள் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

இங்கு வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. தோ்தல் அதிகாரியாக மூத்த வழக்குரைஞா் கண்ணன், விஜய ஆனந்தன் ஆகியோா் நியமிக்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து சங்கத் தலைவராக கே. ரமேஷ், துணைத் தலைவராக ஏ.ரமேஷ், செயலராக சசிக்குமாா், இணைச் செயலராக சதீஸ்குமாா், பொருளாளராக வேலாயுதம், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக ராஜலிங்கம், காா்த்திகேயன், பாக்கியலட்சுமி, சிவசரவணன், முகம்மதுஜாமின் ஆகியோா் ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா். இதில் நீதிபதி மனிஷ்குமாா், மாவட்ட அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன், மூத்த வழக்குரைஞா்கள் சிவராமன், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →