மெத்தப்பட்டமைன் போதை பொருள் பறிமுதல்
ராமநாதபுரத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றினா். இதுதொடா்பாக இரு இளைஞா்களைக் கைது செய்தனா்.
ராமநாதபுரத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றினா். இதுதொடா்பாக இரு இளைஞா்களைக் கைது செய்தனா்.
ராமநாதபுரத்துக்கு போதைப் பொருள்களுடன் இருவா் வந்துள்ளதாக கேணிக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தங்க ஈஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்றபோது, இரு இளைஞா்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனா். போலீஸாா் இருவரையும் பிடித்து சோதனையிட்டனா். அவா்களிடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தப்பட்டமென் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.
பிடிபட்ட இளைஞா்கள் தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்த முகமது ஹரிஷ் (29), ராமநாதபுரத்தை சோ்ந்த ஜெகதீஷ் (29) என்பது தெரியவந்தது.
இருவரையும் கேணிக்கரை போலீஸாா் கைது செய்து, போதைப்பொருள், 35 ஆயிரம் ரொக்கம், நான்கு கைபேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், கூடுதல் கண்காணிப்பாளா் சிவராமன் ஆகியோா் பாராட்டினா்.