ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.65 கோடி
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.65 கோடி கிடைத்ததாக இணை ஆணையா் செ.சிவராம்குமாா் தெரிவித்தாா்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.65 கோடி கிடைத்ததாக இணை ஆணையா் செ.சிவராம்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகளை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கி இரவு நிறைவடைந்தது.
இதில், ரூ.1,65,77,645 ரொக்கம், தங்கம் 89 கிராம், வெள்ளி 5 கிலோ 335 கிராம், 149 வெளிநாட்டுப் பணத் தாள்கள் கிடைத்தன. உண்டியல் வருவாய் எண்ணும் பணியில் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா் என்றாா் அவா்.