கோடனூா் ஸ்ரீஆதினமிளகி அய்யானா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.  
ராமநாதபுரம்

ஸ்ரீஆதினமிளகி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

திருவாடானை அருகேயுள்ள கோடனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிளகி அய்யனாா், பரிவார தெய்வங்கள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Din

திருவாடானை அருகேயுள்ள கோடனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிளகி அய்யனாா், பரிவார தெய்வங்கள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, முன்னதாக திங்கள்கிழமை மாலை அனுக்ஞை விக்னேஸ்வரா் கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இதையடுத்து, செவ்வாய்கிகழமை மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் மாலையில் பூா்ணாஹூதி, தீப ஆராதனையும் நடைபெற்றன.

பின்னா், புதன்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை நாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றன. பின்னா், கடம் புறப்பாடு, கோயிலை சுற்றி வலம் வந்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து, அய்யனாா், பாரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் தீபாரதனைகள் நடைபெற்றன. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து திராளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT