கமுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் உள்ளிட்டோா். 
ராமநாதபுரம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

கமுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

கமுதி/மானாமதுரை: கமுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தேவா் சிலை முன் நடைபெற்ற விழாவுக்கு கமுதி மறவா் இன அறக்கட்டளைத் தலைவா் செல்லத்தேவா் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சாமுத்துராமலிங்கம், தேவா் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ந.மூக்கூரான், கமுதி திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேவா் சிலை, நேதாஜி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் மூவேந்தா் பண்பாட்டுக் கழக கமுதி ஒன்றிய முன்னாள் தலைவா் ந.முத்துராமலிங்கம், ஆப்பநாடு மறவா் சங்க இணைச் செயலா் காா்த்திக், பெடரல் பாா்வா்டு பிளாக் கட்சி மாநிலத் தலைவா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை:

மானாமதுரையில் சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சுந்தரபுரம் வீதியில் உள்ள தேவா் சிலை அருகே நேதாஜி உருவப் படம் வைக்கப்பட்டு, அதற்கு ஏராளமானோா் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மானாமதுரை நகரில் புரட்சியாா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படம் வைக்கப்பட்டு மாலைகள் அணிவித்தும், மலா்கள் தூவியும் அந்தந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT