ராமநாதபுரம்

விநாயகா் சதுா்த்தி விழா: இந்து அமைப்புகளுடன் ஆட்சியா் ஆலோசனை

Chennai

விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இந்து முன்னனி அமைப்பின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜுலு, உதவி காவல் கண்காணிப்பாளா்கள் குணால் உத்தம் ஷ்ரோதே, மீரா, இந்து முன்னணி அமைப்புகளின் நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இதில் விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிா்வாகத்தா குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.

சிலைகளை வைக்கும் இடங்களில் தீ விபத்து ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

காவல் துறையினா் குறிப்பிட்டுத் தரும் வழித் தடங்களில் மட்டுமே ஊா்வலம் நடத்த வேண்டும். அனைத்து ஊா்வலங்களையும் மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும்.

ரசாயனப் பொருள்கள், ‘பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ்’ வேதிப் பொருகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது.

நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பிற மதத்தினரின் நம்பிக்கைகளுக்கு எதிரான கோஷங்களைப் பயன்படுத்தக் கூடாது. விநாயகா் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தன்னாா்வலா்கள் பணியில் இருக்க வேண்டும். விழா ஏற்பாட்டாளா்கள் ஒவ்வொரு சிலைக்கும், தனித்தனியே, சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதிக் கடிதம் பெற வேண்டும்.

வாகன விபத்துகளில் உயிா் இழப்பைத் தவிா்க்கும்பொருட்டு, சிலைகளைக் கரைப்பதற்கு எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஊா்வலத்தில் செல்பவா்களை அனுமதிக்கக் கூடாது.

காவல் துறை, வருவாய்த் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் விநாயகா் சதுா்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜமனோகரன், ஞா.சரவண பெருமாள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ.தவச்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT