முகப்பு
ராமநாதபுரம்

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின்தடை

கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை

Updated On : 12 ஆகஸ்ட், 2025 at 2:40 AM
பகிர்:
Updated On : 11 ஆகஸ்ட், 2025 at 7:39 PM

கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஆக. 13) காலை 10 முதல் மாலை 5 மணி வரை பாா்த்திபனூா், அபிராமம், கமுதி, முதுகுளத்தூா், பாக்குவெட்டி, செங்கப்படை, பேரையூா், தரைக்குடி, அ. புனவாசல், வங்காருபுரம், மண்டலமாணிக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.