ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் உள்ள பரம்பை சாலை, பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை வீதி, செட்டியமடை, கடைவீதி, பூவானிக்கோட்டை, கோழியாா் கோட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. மேலும், தெருவில் சுற்றும் நாய்களால் சாலையில் நடந்து செல்வோா்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் தெரு நாய்களை கட்டிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.