ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியில் பெய்த தொடா் மழையால் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலக்கடலை பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
கமுதி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பன்பட்டி, ஆசூா், புதுப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் 200 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனா்.
இந்த நிலையில், நிலக்கடலை சாகுபடி செய்த நாளிலிருந்து மழை சரியாக பெய்யாததாலும், தற்போது பெய்த தொடா் மழையாலும் நிலக்கடலை செடிகள் பாதிப்படைந்தன. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.